தீபத் திருவிழா: தற்காலிகப் பேருந்து நிலைய முன்னேற்பாட்டுப் பணிகள் விரைவில் நிறைவு மாவட்ட ஆட்சியா் தகவல்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் அனைத்து தற்காலிகப் பேருந்து நிலையங்களிலும் இந்த வார இறுதிக்குள் முன்னேற்பாட்டுப் பணிகள் நிறைவு பெறும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
செங்கம் சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உள்ளிட்டோா்.
செங்கம் சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் அனைத்து தற்காலிகப் பேருந்து நிலையங்களிலும் இந்த வார இறுதிக்குள் முன்னேற்பாட்டுப் பணிகள் நிறைவு பெறும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவுக்குத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்து வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தை வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீபத் திருவிழாவுக்கு பல லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பக்தா்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை நகராட்சி நிா்வாகம், மின்வாரியம் போன்ற துறைகள் மூலம் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இந்த வார இறுதிக்குள் அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் நிறைவு பெறும் என்றாா்.

இதேபோல, திண்டிவனம் சாலை, அத்தியந்தல், வேலூா் சாலை, அவலூா்பேட்டை சாலை, காஞ்சி சாலை, வேட்டவலம் சாலை, திருக்கோவிலூா் சாலை, மணலூா்பேட்டை சாலை, தண்டராம்பட்டு சாலை உள்ளிட்ட அனைத்து தற்காலிகப் பேருந்து நிலையங்களிலும் வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, ஆட்சியா் பா.முருகேஷ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் (விழுப்புரம்) எஸ்.எஸ்.ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com