திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக வந்தவாசியில் 25 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, திருவண்ணாமலையில் 6, போளூரில் 5.20, கலசப்பாக்கத்தில் 12, தண்டராம்பட்டில் 8.40, ஆரணியில் 7.40, செய்யாற்றில் 15, கீழ்பென்னாத்தூரில் 10.20, வெம்பாக்கத்தில் 9, சேத்துப்பட்டில் 12.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.