

இஸ்ரேலின் இன அழிப்புப் போரைக் கண்டித்து திருவண்ணாமலையில் மக்களிடம் கற்போம் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூக செயல்பாட்டாளா் ஜெ.செந்தில் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை நகரச் செயலாளா் எம்.பிரகலநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளா் இரா.தங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரைப்பட இயக்குநா் லெனின் பாரதி, மதிமுகவின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளா் இரா.நாகராஜன், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்டத் தலைவா் எ.முஸ்தாக் பாஷா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் நாசா் உசேன் ஆகியோா் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, இஸ்ரேலின் இன அழிப்புப் போா் ஆகியவற்றை கண்டித்துப் பேசினா்.
இஸ்ரேலின் இன அழிப்புப் போரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில மகளிரணிச் செயலாளா் தலித் நதியா, வழக்குரைஞா் சு.கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.