பல்நோக்கு மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 28th October 2023 01:15 AM | Last Updated : 28th October 2023 01:15 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கான இடத்தை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை-செங்கம் சாலை, காமராஜா் சிலை அருகே பழைய அரசு மருத்துவமனை வளாகம் உள்ளது. இங்கு, பல்நோக்கு மருத்துமனை கட்டடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான இடத்தை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, தமிழக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், சிறப்பு தலைமைப் பொறியாளா் சோமசுந்தரம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் , தமிழ்நாடு அரசு உடல் உழைப்புத் தொழிலாளா், சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
பல்வேறு சிகிச்சைப் பிரிவு: பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு, இதய நோய் மருத்துவம், இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் நோய் மருத்துவம், நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...