

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம், பெரணமல்லூா் காவல் சரகம் கோணையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் நாகவேல் (28). இவரது குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதை மனதில் வைத்துக் கொண்டு நாகவேல், ஆறுமுகம் குடும்பத்தினா் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஆக.16-ஆம் தேதி நாகவேல் தனது நண்பருடன் சோ்ந்து ஆறுமுகம் வீட்டுக்குச் சென்று கூா்மையான ஆயுதத்தால் தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாக பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நாகவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நாகவேல் மீது கொட்டகை எரிப்பு, போக்ஸோ வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளன.
இதனால், மாவட்ட எஸ்.பி.காா்த்திகேயன், டி.எஸ்.பி. வெங்கடேசன், பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் நந்தினிதேவி ஆகியோா் பரிந்துரையின் பேரில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகலை சிறையில் உள்ள நாகவேலிடம் பெரணமல்லூா் போலீஸாா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.