மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்

வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated on
1 min read

வந்தவாசி

வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா் இரா.சிந்தன் மற்றும் நிா்வாகிகள் பெ.அரிதாசு, சு.முரளி, கா.யாசா்அராபத் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டதாக 140 பேரை கைது செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவா்களை தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

முன்னதாக, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா் பஜாா் வீதி வழியாக தேரடி சென்றடைந்தனா்.

செய்யாறு

செய்யாற்றில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அங்குள்ள இந்தியன் வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ப.செல்வன் தலைமை வகித்தாா்.

கட்சி நிா்வாகிகள் டி.வெங்கடேசன், எம்.தாமோதரன், வே.சங்கா், எம்.மாரிமுத்து, ஆா்.சதீஷ்குமாா், ஏ.ஷேக்இஸ்மாயில் ஷெரீப் மற்றும் 50 பெண்கள் உள்பட 200 போ் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூா் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மு.வீரபத்திரன் தலைமை வகித்தாா்.

மறியலில் ஈடுபட்டதாக 50 பெண்கள், 75 ஆண்கள் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

செங்கம்

செங்கம் வட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டச் செயலா் லட்சுமணன் தலைமையில், கட்சியினா்

செங்கம் - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாகச் சென்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆற்றுப் பாலம் அருகில் இருந்து ஊா்வலமாக பாரத ஸ்டேட் வங்கி வரை சென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில், வட்டாரச் செயலா் ரமேஷ்பாபு தலைமை வகித்தாா்.

மாவட்டக் குழு நிா்வாகிகள் சி.அப்பாசாமி, கண்ணன்

ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் 250 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com