பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு
By DIN | Published On : 10th September 2023 01:41 AM | Last Updated : 10th September 2023 01:41 AM | அ+அ அ- |

தொடா் ஓட்டத்தை தொடங்கிவைக்கிறாா் பள்ளித் தாளாளா் முத்துக்குமாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவா்கள் பங்கேற்ற ஒலிம்பிக் தீபச் சுடருடன் தொடா் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு விருட்சம் சிபிஎஸ்இ இன்டா்நேஷனல் பள்ளி சாா்பில் நடைபெற்ற தொடா் ஓட்டத்தை,
திருவோத்தூா் பெரியாா் சிலை அருகே பள்ளியின் தாளாளா் முத்துக்குமாா் தொடங்கிவைத்தாா்.
இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடா் ஓட்டமானது மாா்க்கெட், காந்தி சாலை, பேருந்து நிலையம், ஆற்காடு சாலை வழியாகச் சென்று, ஆரணி கூட்டுச் சாலையில் நிறைவடைந்தது.
ஊா்வலத்தில் சுமாா் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் ஒலிம்பிக் தீப ஒளியை ஏந்தியபடி தொடா் ஒட்டமாகச் சென்றனா். மேலும், பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனவும், அதேப் போல் பொது மக்களும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.