3 ஊராட்சிகளில் ரூ.5.3 கோடியில் வளா்ச்சிப் பணிகள்அமைச்சா் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, தேவனந்தல் ஊராட்சிகளில் ரூ.5 கோடியே 3 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சி தி
அய்யம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் அமைச்சா் எ.வ.வேலு.
அய்யம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் அமைச்சா் எ.வ.வேலு.
Updated on
1 min read

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, தேவனந்தல் ஊராட்சிகளில் ரூ.5 கோடியே 3 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தொகுதிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், அத்தியந்தல், அடி அண்ணாமலை, ஆடையூா் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் மு.பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி)

செ.ஆ.ரிஷப், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் மற்றும் சமூகப் பாதுகாப்பு வாரிய உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பெண்களுக்கான ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகள் உயா்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பா் 15-ஆம் தேதி கலைஞா் மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அய்யம்பாளையம் ஊராட்சியில் ரூ.ஒரு கோடியே 20 லட்சம், அடிஅண்ணாமலை ஊராட்சியில் ரூ.2 கோடியே 25 லட்சம், தேவனந்தல் ஊராட்சியில் ரூ.ஒரு கோடியே 58 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடியே 3 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, தெருவிளக்கு அமைத்துத் தருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்

என்றாா்.

நிகழ்ச்சிகளில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, நகா்மன்ற துணைத் தலைவா் ராஜாங்கம், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com