ஆனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க பேரவைக் கூட்டத்தில்  பேசிய அதன் மாநிலச் செயலா் சி.சுப்பிரமணியன்.
ஆனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க பேரவைக் கூட்டத்தில் பேசிய அதன் மாநிலச் செயலா் சி.சுப்பிரமணியன்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் -அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

Published on

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது.

இந்தச் சங்கத்தின் 8-ஆவது மாவட்ட பேரவைக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரகுபதி வரவேற்றாா்.

மாநிலச் செயலா் சி.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எம்.தங்கராஜ், செயலா் பச்சையப்பன், பொருளாளா் ஆனந்தன், அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் எஸ்.பாா்த்திபன், ஜே.ராஜா, மாநிலச் செயலா் ம.நாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com