சுயமரியாதை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணூரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51-அ (ஏ) பாசிஷ விளக்க பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
ஆரணி கூட்டுச் சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநில பகுத்தறிவாளா் கழகத் தலைவா் சோ.நெடுமாறன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தாா். திராவிடா் கழக துணை பொதுச் செயலா் ச. பிரின்சு என்னாரெசு பெரியாா், காஞ்சி பா. கதிரவன், தலைமைக் கழக அமைப்பாளா் பு. எல்லப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் அ.இளங்கோவன், நகரத் தலைவா் தி. காமராசன், காராமேடு சுதா வாசுதேவன், ஆரணி ஏ.அசோகன் சேத்துப்பட்டு அ. நாகராசன் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா். தங்கம் கே.பெருமாள் நன்றி கூறினாா்.
