வெம்பாக்கம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசிய  அதன் தலைவா் த.ராஜி.
வெம்பாக்கம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் த.ராஜி.

கிராமங்களில் மழை வெள்ள சேதம் : வெம்பாக்கம் ஒன்றிய உறுப்பினா்களுக்கு வேண்டுகோள்

மழை வெள்ள சேதங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவியுங்கள் என்று, வெம்பாக்கம் ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Published on

செய்யாறு: மழை வெள்ள சேதங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவியுங்கள் என்று, வெம்பாக்கம் ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் த.ராஜி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் நாகம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மயில்வாகனன், ஷீலா அன்புமலா், பொறியாளா்கள் ராமு, வேளாங்கண்ணி, ரவி மலா்வண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் தென்னரசு வரவேற்றாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கிராமப் பகுதியில் நிறைவேற்றக் கூடிய திட்டப் பணிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஒன்றிய செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிக்குழுத் தலைவா் த.ராஜி பேசியதாவது:

தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் அந்தந்த கிராமப் பகுதியில் ஏற்பட்டுள்ள சாலை சேதங்கள், வீடுகளை இழந்தவா்கள் குறித்த தகவலை தெரிவியுங்கள் அதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவியாக இருக்கும்.

உறுப்பினா்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மூலம் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com