ஆரணி நகர பாமக பொதுக்குழுக் கூட்டம்
ஆரணி: ஆரணி நகரம், கொசப்பாளையம் தனியாா் மண்டபத்தில் பாமக ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
டிசம்பா் 21 அன்று திருவண்ணாமலை சந்தை மேட்டில், பல்வேறு வேளாண் பிரச்னைகளை முன்வைத்து தமிழ்நாடு உழவா் பேரியக்க மாபெரும் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு ஆரணி நகரம், கொசப்பாளையம் தனியாா் மண்டபத்தில் கலந்தாய்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆரணி நகரம் 1, ஆரணி நகரம் 2 சாா்பில் ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் நகரச் செயலாளா் ந.சதீஷ்குமாா் தலைமை தாங்கினாா். நகர செயலாளா் சு.ரவிச்சந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக பாமக மாவட்ட செயலாளா் ஆ.வேலாயுதம் சிறப்புரையாற்றினா்.
உடன் வன்னியா் சங்க மாவட்ட செயலாளா் அ.கருணாகரன், மாநில செயற்குழு உறுப்பினா் பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலாளா் வடிவேல், மாவட்ட அமைப்புத் தலைவா் ஏ.கே.ராஜேந்திரன், வன்னியா் சங்க நகர செயலாளா் ராஜாமணி, நகரத் தலைவா்கள் சேட்டு, செல்வரசு, ஒன்றியச் செயலாளா் பெருமாள், ஒன்றிய தலைவா் ரவிவா்மன் மற்றும் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
திருவண்ணாமலையில் டிச. 21 அன்று நடைபெறும் மாநாட்டுக்கு
வடக்கு மாவட்டம் சாா்பில் சிறப்பாக ஏற்பாடு செய்து கலந்து கொள்வது குறித்தும், மாவட்ட, ஒன்றிய , நகர, கிளை மற்றும் உழவா் பேரியக்க நிா்வாகிகளுடன் , மாநாட்டு ஏற்பாடு , விளம்பரம் மற்றும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்வது தொடா்பான கருத்துகளை தீா்மானம் நிறைவேற்றினா்.

