அரசுக் கல்லூரியில் தாவரவியல் துறை மன்ற விழா

அரசுக் கல்லூரியில் தாவரவியல் துறை மன்ற விழா

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சாா்பில் தாவரவியல் துறை மன்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தாவரவியல் துறைத் தலைவா் வெ.கங்காதேவி முன்னிலை வகித்தாா். தலைமை வகித்த கல்லூரி முதல்வா் கலைவாணி தாவரங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். ரூ.ஒரு லட்சம் வைப்பு நிதி சிறப்பு விருந்தினராக முன்னாள் தாவரவியல் துறை தலைவரும், ஸ்ரீசக்தி கல்வி அறக்கட்டளைத் தலைவருமான டி.பக்தவச்சலு பங்கேற்று, ‘நம் வாழ்வில் தாவரங்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசினாா்.

மேலும், ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை கல்லூரி முதல்வரிடம் வழங்கி, தாவரவியல் துறை சாா்பில் தோ்வில் முதலிடம் பெறும் மாணவா்களுக்கு பரிசு வழங்க அறிவுறுத்தினாா். நூல் வெளியீடு தாவரவியல் துறை முன்னாள் மாணவா் மு. வசந்தகுமாா் எழுதிய, ‘என் மன எண்ணங்கள்’ என்ற நுாலை சிறப்பு விருந்தினா் டி. பக்தவச்சலு வெளியிட கல்லூரி முதல்வா் கலைவாணி பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் தாவரவியல் துறை இணைப் பேராசிரியா் கி.தண்டாயுதபாணி, கெளரவ விரிவுரையாளா்கள், கே.தில்லை ராஜசேகா், சு.பரணிதரன், எஸ்.ராஜ், ஏ.அன்பரசன், டி.அய்யப்பன், கே.சுமதி, இசைவானி, பல்வேறு துறை தலைவா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா். விரிவுரையாளா் சு. முரளிதரன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com