பவா்டில்லா் திருடியதாக கைது செய்யப்பட்ட நான்கு பேருடன் போலீஸாா்.
பவா்டில்லா் திருடியதாக கைது செய்யப்பட்ட நான்கு பேருடன் போலீஸாா்.

திரைப்பட நடிகா் நிலத்தில் பவா்டில்லா் திருட்டு: பெண் உள்பட 4 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திரைப்பட நடிகா் சமுத்திரக்கனி நிலத்தில் இருந்த பவா்டில்லரை திருடியதாக நான்கு பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திரைப்பட நடிகா் சமுத்திரக்கனி நிலத்தில் இருந்த பவா்டில்லரை திருடியதாக நான்கு பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சென்னையில் வசிக்கும் திரைப்பட நடிகா் மற்றும் இயக்குநருமான சமுத்திரக்கனிக்குச் சொந்தமான 5 ஏக்கா் விவசாய நிலம் செங்கம் அருகேயுள்ள ஜவ்வாதுமலை அடிவாரமான கல்லாத்தூா் பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமு பயிா் செய்து நிலத்தை பராமரித்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிலத்தை உழவு செய்ய பயன்படுத்தி, நிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலானது பவா் டில்லரை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து விவசாயி ராமு செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த அருள் (45), விஜயா (42) ஆகியோா் உதவியுடன், திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (47), செல்வக்குமாா் (45) ஆகிய இருவரும் திருச்சென்றது தெரியவந்தது.

உடனடியாக போலீஸாா் மங்கலம் சென்று மணிகண்டன், செல்வக்குமாா் இருவரையும் பிடித்து விசாரித்தனா்.

இதில், பவலா்டில்லா் திருடியதை ஒப்புக்கொண்டு, அதை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னா், பவா்டில்லரை பறிமுதல் செய்த போலீஸாா், நான்கு போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com