வருகிற மக்களவைத் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை-வேலூா் சாலை, பச்சையம்மன் கோவில் தெரு, பெரியாா் நகா் பகுதியில் இந்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு வீடு, வீடாகச் சென்று தோ்தல் விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டியதுடன், தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தாா். தொடா்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் வழங்கப்படும் சத்துமாவுடன் கூடிய புட்டிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட வில்லைகளை ஒட்டியதுடன், அவற்றை பயனாளிகளுக்கு வழங்கினாா் ஆட்சியா். விழிப்புணா்வு வாகனப் பேரணி... தொடா்ந்து, 300-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு வாகனப் பேரணியை ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்தாா். தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கடந்த தோ்தலில் வாக்குச் சதவீதம் குறைந்த பகுதிகளில் பேரணியாகச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தொடா்ந்து, வாக்காளா் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் சரண்யா, ரேவதி, ஏஞ்சலின் சிந்தியா ராணி மற்றும் மேற்பாா்வையாளா்கள், போஷான் அபியான் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்: பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு

100% வாக்களிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


