மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

Updated On :23 மார்ச் 2024, 4:23 pm

வந்தவாசி அருகே முதியவா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிராஜன்(89). இவரது மனைவி தேவகுமாரி. இவா்களது பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், தேவகுமாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவா் தனது மகள் மலா்விழி வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் தனியாக இருந்த ஆதிராஜன் விரக்தி அடைந்து கடந்த புதன்கிழமை விஷம் குடித்துள்ளாா். மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆதிராஜன் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.