
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பேரவைக் கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பேரவைக் கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா்.
வந்தவாசி: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க திருவண்ணாமலை மாவட்ட பேரவைக் கூட்டம் வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் எஸ்.ரேணுகா தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தொடக்க உரையாற்றினாா். சங்க மாநில பொதுச் செயலா் இரா.சரவணன் நிறைவுரை ஆற்றினாா்.
பழங்குடியின மக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும், அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில் பழங்குடியினரின் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும், பழங்குடியினா் வாழும் பகுதிகளில் சிமென்ட் சாலைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவா் ந.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...