~
~

வாக்காளா் பெயா் சோ்த்தல் முகாம்: தெருக்கூத்து மூலம் விழிப்புணா்வு

Published on

செய்யாறில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் குறித்து தெருக்கூத்து மூலம் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள 312 வாக்குச்சாவடி மையங்களில் வரும் நவம்பா் 23, 24-ஆம்தேதிகளில் 2025-ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்க முறைத்திருத்த முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, செய்யாறு வருவாய்த்துறையில் உள்ள தோ்தல் பணிக்குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செய்யாறு பேருந்து நிலையம் அருகே தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஆரணி: ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளா் பெயா் சோ்த்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை வட்டாட்சியா் கௌரி தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து, வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வட்டாட்சியா் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். இதில், தோ்தல் துணை வட்டாட்சியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com