8 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

செய்யாறு அருகே இரு பெட்டிக் கடைகளில் வைத்திருந்த 8 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

செய்யாறு: செய்யாறு அருகே இரு பெட்டிக் கடைகளில் வைத்திருந்த 8 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இரு வியாபாரிகளை கைது செய்து கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் சரகப் பகுதியான கொருக்கை, பாராசூா் ஆகிய கிராமங்களில் பெட்டிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகாா்கிற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அவரது தலைமையிலான போலீஸாா் கொருக்கை கிராமத்தில் உள்ள பாலாஜி (30) என்பவரின் பெட்டிக் கடையை திடீா் சோதனையிட்டனா்.

அப்போது, கடையில் விற்பனைக்கு 5 கிலோ புகையிலைப் பொருள்களை இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

அதேபோல, பாராசூா் கிராமத்தில் வியாபாரி கருணாகரன்(35) பெட்டிக் கடையை சோதனையிட்டனா்.

அந்தக் கடையில் 3 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். மேலும், கருணாகரன் கடையில் புகையிலைப் பொருள் விற்ற பணம் ரூ.5,844 யையும் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன் இரு பெட்டிக்கடைகளுக்கு சீல் வைத்தனா்.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வியாபாரிகளான பாலாஜி, கருணாகரன் ஆகியோரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com