ஆரணி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை திறந்து வைத்த துணை முதல்வா்  உதயநிதிஸ்டாலின்.
ஆரணி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின்.

ஆரணி அருகே கருணாநிதி சிலை திறப்பு: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

ஆரணி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின்.
Published on

ஆரணி அருகே முள்ளிப்பட்டு புறவழிச் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் திறந்துவைத்தாா்.

விழாவில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை

வகித்தாா்.

ஆரணி எம்.பி.யும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலருமான எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக ஓரணியில் உள்ளது. அதிமுக கட்சியில் உள்ளவா்களே தனித்தனி அணியாக உள்ளனா். அவா்கள் எந்த அணியென்றே தெரியாது. அதிமுக கட்சியை யாா் கைப்பற்றுவது என்று போட்டி போட்டிக்கொண்டு உள்ளனா்.

பாஜகவின் திட்டம் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தோ்தல் ஒரே மொழி. சிறந்த முதல்வராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம்.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை. கல்விக்கான நிதியை வழங்குவதில்லை.

ஆரணியில் 45 கோடி மதிப்பில் டாக்டா் கலைஞா் நூற்றாண்டு பட்டு ஜவுளி பூங்கா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10 ஆயிரம் நெசவாளா்கள் பயன்பெறுவா். ஆரணியிலேயே பெரிய குளமான சூரியகுளம் சீரமைக்க 5 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கி பணி முடியும் தருவாயில் உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் ஒ.ஜோதி, எஸ்.அம்பேத்குமாா், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், துரைமாமது, மோகன், எஸ்.ராஜகுமாா், நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்தனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஆரணி எல்லையில் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலினுக்கு எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், உதயநிதிஸ்டாலினுக்கு வெள்ளியிலான செங்கோலை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com