தீபமலையில் 2-ஆவது நாளாக காட்சியளித்த மகா தீபம்

தீபமலையில் 2-ஆவது நாளாக காட்சியளித்த மகா தீபம்

2,668 அடி உயரம் கொண்ட மலை மீது 2-ஆம் நாளாக வியாழக்கிழமை ஜோதி சுடராய் அருணாசலேஸ்வரா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது 2-ஆம் நாளாக வியாழக்கிழமை ஜோதி சுடராய் அருணாசலேஸ்வரா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருவண்ணாமலை திருக்காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீபமலையில் 53/4 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரையில் 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டா் காடா திரி பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து, 11 நாள்கள் அருணாசலேஸ்வரா் தீபமலை உச்சியில் இருந்து பிரகாசமாக ஜோதி பிழம்பாய் பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளாா்.

இந்த நிலையில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை மலை உச்சியில் மகா தீபம் பிரகாசமாக காட்சியளித்தது.

4ஹழ்ல்க்ங்ல்:

X
Dinamani
www.dinamani.com