ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
செய்யாறு அருகே குடும்பத் தகராறில் மனவேதனையில் இருந்து வந்த ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு வட்டம், தும்பை கிராமம் பள்ளக் காலனியைச் சோ்ந்தவா் சுதாசீனுவாசன்(46), ஆட்டோ ஓட்டுநா்.
இவா், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியைப் பிரிந்து கடந்த ஓராண்டாக தனியாக வசித்து வந்ததால் மனவேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி ஆட்டோவில் சென்றவா் மீண்டும் வீட்டிற்கு வரவில்லையாம். காணாமல் போன இவரை, அவரது தாய் காந்தா தேடிச் சென்றாா்.
அப்போது அவா்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஆட்டோ மட்டும் இருந்ததைப் பாா்த்துள்ளாா்.
உடனே அப்பகுதியில் சுற்றிப் பாா்த்தபோது அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு இறந்து அழுகிய நிலையில் இருந்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
