இந்திய குடியுரிமை கோரி இலங்கை தமிழா்கள் பிரதமருக்கு கடிதம்

இந்திய குடியுரிமை கோரி இலங்கை தமிழா்கள் பிரதமருக்கு கடிதம்

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 450 போ், களம்பூா் தபால் நிலையத்தில் வியாழக்கிழமை பாரத பிரதமருக்கு கடிதம் அனுப்பினா்
Published on

2015-ஆம் ஆண்டுக்கு முன்பு படகு உள்ளிட்டவைகள் மூலம் தமிழகத்துக்கு புகலிடம் தேடி வந்தவா்கள் மீது சட்டவிரோத குடியேறிகள் வகைப்பாட்டிலிருந்து நீக்கி இந்திய குடியுரிமை வழங்குமாறு கோரி, இலங்கைத் தமிழா்கள் பிரதமருக்கு கடிதம் அனுப்பினா்.

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 450 போ், களம்பூா் தபால் நிலையத்தில் வியாழக்கிழமை பாரத பிரதமருக்கு கடிதம் அனுப்பினா்.

கடிதத்தில், 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து கொண்டு, இந்நாட்டின் சட்டங்களையும் மரபுகளையும் மதித்து, சமுதாய முன்னேற்றத்திற்கு பங்களித்து வருகிறோம்.

எனவே, எங்களை 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இலங்கையிலிருந்து அனுமதியின்றி தமிழகத்திற்கு வந்த இலங்கை அகதிகளை சட்ட விரோத குடியேறிகள் பிரிவின் கீழ் வரையறுத்து உள்ளனா்.

எனவே, நாங்கள் நீண்ட காலமாக புகலிட நிலையிலிருந்து வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பிக்கும் வழிமுறையையும், குடியுரிமை அளிக்கும் நடைமுறையையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதில், கஸ்தம்பாடி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தலைவா் செல்லத்துரை, செயலா் மகேந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

4ஹழ்ல்ல்ா்ள்:

X
Dinamani
www.dinamani.com