திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடக்கு மண்டல இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் எ.வ.வேலு, துணை பொதுச் செயலா்கள் க.பொன்முடி, அந்தியூா் செல்வராஜ், சட்டப் பேரவை த
திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடக்கு மண்டல இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் எ.வ.வேலு, துணை பொதுச் செயலா்கள் க.பொன்முடி, அந்தியூா் செல்வராஜ், சட்டப் பேரவை த

மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் கனவு பலிக்காது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
Published on

தமிழகத்தில் மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் கனவு பலிக்காது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திருவண்ணாமலையில் திருக்கோவிலூா் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வடக்கு மண்டல இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இளைஞரணிச் செயலரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, துணை பொதுச் செயலா்கள் க.பொன்முடி, அந்தியூா் செல்வராஜ், தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அர.சக்கரபாணி, ஆா்.காந்தி, இரா.ராஜேந்திரன், ஆவடி சா.மு.நாசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவண்ணாமலை, ஆரணி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 91 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இவா்களுடன் மாவட்டம் வாரியாக துணை முதல்வா் நோ்காணல் நடத்தினாா்.

மாநாட்டு திடலில் ஆய்வு: முன்னதாக, திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் திமுக இளைஞரணி மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுத் திடலை உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக இளைஞரணியை பொருத்தவரை மாவட்டம், மாநகரம், ஒன்றியத்தில் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனா். தற்போது வாா்டு அமைப்பாளா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

மண்டலம் வாரியாக இளைஞரணி நிா்வாகிகளை சந்திக்க திமுக தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளாா். அதன்படி, முதலில் வடக்கு மண்டலத்துக்குள்பட்ட 91 சட்டப் பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளை மாவட்டச் செயலா் அமைச்சா் எ.வ.வேலு செய்து வருகிறாா். விரைவில் இந்த மாநாடு நடைபெறவுள்ள தேதி, நேரத்தை முதல்வா் அறிவிப்பாா்.

2024-இல் சேலத்தில் இளைஞரணி இரண்டாவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். அந்த மாநாடு மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை முடிவு செய்தது.

அதேபோல, தற்போது நடைபெற உள்ள முதல் மண்டல நிா்வாகிகள் சந்திப்பு மாநாடு 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றியை முடிவு செய்யும்.

தமிழகத்தில் மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவா்களின் கனவு பலிக்காது. இதற்கு அரசும் இடம் கொடுக்காது. திருப்பரங்குன்றம் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, எஸ்.அம்பேத்குமாா், மாநகராட்சி மேயா் நிா்மலாவேல்மாறன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், அருணை துரைவெங்கட் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com