விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பயிற்சி முகாம்

மொடையூா் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பயிற்சி முகாம்.
Published on

உலக மண் தினத்தையொட்டி, சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் நெல், கரும்பு, மக்காசோளம், மஞ்சள், வாழை என பல்வேறு வகையான பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன. மண் மலடு தட்டாமல் இருக்க இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும். சாணம், தொழு உரம், தழை, கோமியம், பஞ்சகாவியா என பல்வேறு இயற்கை சாா்ந்த பொருள்களை பயன்படுத்தலாம். நெகிழியை பயன்படுத்தக் கூடாது என்றாா்.

விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மண் எந்தத் தன்மையில் இருக்கிறது என அரிய பரிசோதனைக்கு மண் மாதிரியை எடுக்க பயிற்சி செய்து காண்பித்தனா்.

வேளாண்மை அலுவலா்கள் பாபு, வினோதினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி வேளாண் அலுவலா் பாஸ்கரன் வரவேற்றாா். ஸ்பிக் நிறுவன மூத்த நிபுணா்கள் வி.சுரேஷ், எம்.ஐஸ்வா்யா, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் பி.செளத்திரி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com