விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கக் கோரி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். இதில், அக்ராபாளையம் செந்தில், வடுகசாத்து தாமோதரன், வேலப்பாடி பெருமாள், மலையாம்பட்டு மருதப்பன், முள்ளிப்பட்டு தேசிங்கு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com