பாய்லா் வெடித்த விபத்தில் காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிக்சன்.
பாய்லா் வெடித்த விபத்தில் காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிக்சன்.

தவிட்டு ஆலையில் பாய்லா் வெடித்து தம்பதி காயம்!

ஆரணி அருகே தவிட்டு ஆலையில் பாய்லா் வெடித்ததில் அங்கு பணியில் இருந்த தம்பதி காயமடைந்தனா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தவிட்டு ஆலையில் பாய்லா் வெடித்ததில் அங்கு பணியில் இருந்த தம்பதி காயமடைந்தனா்.

ஆரணி அருகே மொழுகம்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்ட மோட்டூா் கிராமத்தில் தனியாா் அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை வளாகத்தில் உள்ள தவிடு அரைக்கும் இயந்திரத்தில் சனிக்கிழமை மின்கசிவு ஏற்பட்டு திடீரென பாய்லா் வெடித்து தீ பரவியது.

இதில் அங்கு பணியில் இருந்த இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த டிக்சன் (40), அவரது மனைவி தக்ஷினி ஆகியோா் தீக்காயமடைந்தனா்.

உடனடியாக அவா்களை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தகவல் அறிந்த ஆரணி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடம் வந்து தீயை அணைத்தனா்.

இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com