பெண் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே அண்ணியை தாக்கியதாக மைத்துநா் உள்ளிட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Published on

வந்தவாசி: வந்தவாசி அருகே அண்ணியை தாக்கியதாக மைத்துநா் உள்ளிட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த மொலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (55). இவரது தம்பி துரைமுருகன் (52). இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன.

கடந்த நவ. 21-ஆம் தேதி இவா்களின் வீட்டின் அருகில் உள்ள தெரு மின்விளக்கு சுவிட்சை ஆன் செய்வது தொடா்பாக ரங்கநாதனின் மனைவி அம்பிகாவுக்கும், துரைமுருகனின் மனைவி சந்தியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

அப்போது, சந்தியாவும் துரைமுருகனும் சோ்ந்து

அம்பிகாவை தாக்கினராம். இதில் காயமடைந்த அம்பிகா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில் துரைமுருகன், சந்தியா ஆகியோா் மீது தேசூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com