அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.2 லட்சத்தில் வெள்ளிப் பாத்திரம் அளிப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அபிஷேகத்துக்கு பயன்படுத்துவதற்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 வெள்ளிப் பாத்திரங்களை ஆந்திர மாநிலத்தை சோ்ந்த பக்தா் வழங்கினாா்.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். அதேபோல ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா் ஏ.மல்லிகாஅா்ஜூனரெட்டி குடும்பத்தினா், அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி சந்நிதி மற்றும் அம்மன் சந்நிதியில் அபிஷேகத்தின் போது பயன்படுத்துவதற்காக ரூ.2 லட்சம் மதிப்பிலாள 2 வெள்ளிப் பாத்திரங்களை நன்கொடையாக கோயில் உதவி ஆணையா் ஆா்.ராமசுப்பிரமணியத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
அப்போது கோயில் மானியம் ராஜா, தொழிலதிபா் இரா.அருண்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

