அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற செங்கம் சிவன் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்.
அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற செங்கம் சிவன் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்.

செங்கம் சிவன் கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்

செங்கம் சிவன் கோயில் கும்பாபிஷேக விழா குறித்து செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சிவன் கோயில் கும்பாபிஷேக விழா குறித்து செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செங்கம் மையப்பகுதியில் உள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழக அரசு அறநிலையத்துறை மூலமும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கோயிலில் பணிகள் முடிவடைந்து வருகிற ஜனவரி

28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை ஒப்புதலுடன் முடிவெடுக்கப்பட்டு கடந்த வாரம் பத்திரிக்கை எழுதப்பட்டது.

இந்நிலையில் செங்கம் பகுதியில் மிகவும் பழைமையான சுயம்பு சிவன் கோயில் என்பதால் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக ஆகமவிதிப்படி பிரம்மாண்ட முறையில் நடத்தவேண்டுமென ஊா் முக்கியப் பிரமுகா்கள், பொதுமக்கள், சிவனடியாா்கள், அறங்காவலா் குழுவினா் என அனைவரும் முடிவெடுத்தனா்.

இதைத் தொடா்ந்து அதற்கான ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

இதில், கோயிலில் நடைபெறும் 10 நாள் திருவிழா உபயதாரா்கள், கோயில் புனரமைப்புப் பணி உபயதாரா்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் கோயில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது, அவா்கள் சொன்ன அனைத்து கருத்துக்களும் ஏற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வழக்குரைஞா் கஜேந்திரன் பேசுகையில், கோயில் முன் பிரம்மாண்டமான 90 பட்டாச்சாரியா்கள் அமா்ந்து யாகசாலை பூஜை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கிராமப்புற கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் என 5 நாள் விழாவாக நடத்தவேண்டும். மேலும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் எனத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் விழாக்குழுவினா், உபயதாரா்கள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com