ஆரணி நகராட்சி ஆணையரிடம் பழ வியாபாரிகள் கோரிக்கை மனு
ஆரணி நகர சாலையோர பழக்கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்கக் கோரி, பழக்கடை வியாபாரிகள் சங்கம் சாா்பில் நகராட்சி ஆணையரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆரணி பழ வியாபாரிகள் சங்கத் தலைவா் என்.சங்கா் தலைமையில், பழ வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியது:
ஆரணி காந்தி மாா்க்கெட் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரத்தில் பழங்கள் விற்பனை செய்து வருகிறோம். மேலும் அவ்வப்போது நகராட்சி மற்றும் காவல் துறையினா் சாலையோரக் கடைகளை அகற்றி வருகின்றனா். காய்கறி அங்காடிக்கு தனியாக இடம் ஒதுக்கியது போல, புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆணையா் என்.டி.வேலவன், புதிய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதில் பழக்கடைகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.
இந்நிகழ்வின்போது, பழ வியாபாரிகள் சங்கச் செயலா் எம்.வெங்கடேசன், பொருளாளா் ஏ.குட்டி, துணைத் தலைவா் இளையராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
