திருவண்ணாமலையில் நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை   ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Published on

திருவண்ணாமலையில் உள்ள, நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வரின் ஆணைப்படி மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு பல சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு கல்வி உதவி, நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் என பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

மேலும், டிச.10 தொடங்கி டிச.28 வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது.

இதில் முதல் நாளான புதன்கிழமை திருவண்ணாமலையில் உள்ள நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாமை ஆட்சியா் க.தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், டிச. 12-ஆம் தேதி வெம்பாக்கம், டிச. 16-இல் தண்டராம்பட்டு, டிச. 17 அனக்காவூா், டிச. 19 புதுப்பாளையம், டிச. 23 செய்யாறு, டிச. 24 செங்கம், டிச. 26 தெள்ளாா், டிச.30 கலசப்பாக்கம், டிச.31பெரணமல்லூா், ஜன. 2 வந்தவாசி, ஜன. 6 துரிஞ்சாபுரம், ஜன. 7 மேற்கு ஆரணி, ஜன. 9 ஆரணி, ஜன. 21ஜவ்வாதுமலை, ஜன. 23 கீழ்பென்னாத்தூா், ஜன. 27 சேத்துப்பட்டு, ஜன. 28-இல் போளூா் ஆகிய இடங்களில் இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன.

18 வயதிற்குள்பட்ட மாற்றுத்திறன் பள்ளி மாணவா்களும், 18 வயதிற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com