ஆராசூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.
ஆராசூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி!

திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா்.

அப்போது, திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினா்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவா் பேசியதாவது:

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் திமுகவினா் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் போன்றவற்றை சரிபாா்க்க வேண்டும் என்றாா்.

மேலும் திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அவா் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினாா்.

திமுக தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் படூா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com