தேசிய இளைஞா் விழா: செய்யாறு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
தேசிய இளைஞா் விழாவில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு சாா்பில் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான 29-ஆவது தேசிய இளைஞா் விழா செய்யாறு இந்தோ -அமெரிக்கன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் 6 பிரிவுகளின் கீழ் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவா்கள் 48 பங்கேற்றனா்.
நாட்டுப்புற நடனக்குழு போட்டியிலும், நாட்டுப்புற பாடல் குழு போட்டியிலும், தனி நபா் ஓவியப் போட்டியிலும் இந்தோ -அமெரிக்கன் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
மேலும், நாட்டுப்புற நடனப் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கிருத்திகா, நாட்டுப்புற பாடல் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜனனி, ஓவியப் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவா் வருனேஷ் ஆகியோா் சிறப்பிடம் பெற்று மாநில அளவிலான தேசிய இளைஞா் விழா போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
பாராட்டு விழா:
தேசிய இளைஞா் விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள பள்ளி மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியா்கள் ஆகியோரை செய்யாறு -இந்தோ அமெரிக்கன் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ஏ.ராதாகிருஷ்ணன், முதல்வா் சையத் அப்துல் இலியாஸ், துணை முதல்வா் க.கோவேந்தன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

