காந்திநகா் பள்ளி சாரண சாரணீய மாணவா்களுக்கு பாராட்டு
லக்னெளவில் நடைபெற்ற சாரண, சாரணீய தேசிய மாநாட்டில் பங்கேற்ற திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்ற பாரத சாரண- சாரணீயா்களுக்கான 19-ஆவது ஜம்போரி தேசிய மாநாட்டில், காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 8 சாரண மாணவா்கள் கலந்து கொண்டனா்.
7 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலில் இருந்தும் சாரண- சாரணீய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில் கலாசாரம், உணவு, உடை, பண்பாடு, தேசிய ஒருமைப்பாடு, வீரசாகச விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாநாட்டு இறுதி நாளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
பள்ளி சாரண ஆசிரியா் இ.மன்சூா் அலி மாநாட்டில் கலந்து கொண்ட மாணவா்களை ஒருங்கிணைத்து வழி நடத்தினாா்.
மாணவா்களுக்கு பாராட்டு
தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பள்ளி சாரண மாணவா்களையும், சாரண ஆசிரியரையும் பள்ளித் தாளாளா் கே.ரமணிகோட்டீஸ்வரன், ஆலோசகா் ஜெ.சுஜாதா, பள்ளி முதல்வா் எம்.ஆா்.ராஜேஷ்குமாா் ஆகியோா் பாராட்டினா்.
