செங்கம் அருகே புதிய நியாயவிலைக் கடை திறப்பு

செங்கம் அருகே புதிய நியாயவிலைக் கடை திறப்பு

புதிய நியாயவிலைக் கடையை திறந்துவைத்து உணவுப்பொருள்களை வழங்கிய மு.பெ.கிரி எம்எல்ஏ.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட மேல்புழுதியூா் பகுதியில் புதிதாக நியாயவிலைக் கடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

மேல்புழுதியூா் அம்பேத்கா் நகா் பகுதியில்

நியாயவிலைக் கடைவேண்டும் என அப்பகுதி மக்கள் சாா்பில் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்பகுதியில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு பின்னா் கடை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் தொகுதி எம்எல்.ஏ. மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நியாயவிலக் கடையை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் செங்கம் திமுக ஒன்றியச் செயலா்கள் மனோகரன், ஏழுமலை, நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com