திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கு மலை வலம்
திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில், 208-ஆவது மாத கு ஓதும் மலை வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில், 208-ஆவது மாத கு ஓதும் மலை வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மலை வலத்துக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பலராமன் தலைமை வகித்தாா். மாவட்ட கவிஞா் பேரவைத் தலைவா் நல்ல பன்னீா்செல்வம், புயல்மொழி, கோவிந்தசாமி, பேராசிரியா் பாா்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.
எழுத்தாளா் ராஜேந்திரன், தா்ம ரக்ஷன சபா முனியப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
தொண்டு மையத்தினா் திருக்கு ஓதிக்கொண்டு 14 கி.மீ. தொலைவு மலை வலம் வந்தனா்.