போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம் ரெண்டேரிப்பட்டு, பொத்தரை, பெரியகரம், செங்குணம் என பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் மணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
போளூா் ஒன்றியம் ரெண்டேரிப்பட்டு ஊராட்சியில் முதல்வரின் மறுசீரமைப்புத் திட்டத்தில் சீரமைக்கப்படும் வீடுகள், கலைஞரின் கனவு இல்லம், நெற்களம், சேமிப்புக் கிடங்கு அமைத்தல் பணி, பொத்தரை ஊராட்சியில் 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.30 லட்சத்தில் ஊராட்சிமன்றக் கட்டடம், அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நட்டு பராமரித்தல் பணி, பெரியகரம் ஊராட்சியில் 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.45 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணி, ரூ.1 லட்சத்து 45ஆயிரத்தில் கிராமப்புறநூலக கட்டடம் புதுப்பித்தல் பணி, செங்குணம் ஊராட்சியில் கொல்லைமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை புதுப்பித்தல் பணி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் மணி
வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரபியுல்லா, லட்சுமி, உதவிப் பொறியாளா்கள் படவேட்டான், திவாகா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிச்சாண்டி, பரமேஸ்வரி, ராணி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
