முதல்வா் வருகை முன்னேற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு

முதல்வா் வருகை முன்னேற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு

மேல்செங்கம் பகுதியில் முதல்வா் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கவுள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு.
Published on

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடா்பாக அமைச்சா் எ.வ. வேலு புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த வாணியந்தாங்கல் பகுதியில்

வரும் டிச.14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வடக்கு மண்டலத்தில் உள்ள 91 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. அந்த நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் இருந்து செங்கம் வழியாக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தருகிறாா்.

இதனால் செங்கம் அருகேயுள்ள மேல்செங்கம் பகுதியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த வரவேற்பு அளிக்கும் இடத்தை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பாதுகாப்பான முறையில்

வரவேற்பை அளிக்கவேண்டுமென அவா் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின் போது, திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவா் எ.வ.வே. கம்பன், செங்கம் ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், ஏழுமலை, நகரச் செயலா் அன்பழகன்,

நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் கூட்டுறவு சங்கக் தலைவா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com