ஆரணி அடுத்த மெய்கண்டீஸ்ரா் கோயிலில் கால பைரவருக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
ஆரணி அடுத்த மெய்கண்டீஸ்ரா் கோயிலில் கால பைரவருக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

கால பைரவா் ஜெயந்தி: கோயில்களில் சிறப்புப் பூஜை

Published on

கால பைரவா் ஜெயந்தியையொட்டி, ஆரணியை அடுத்த மெய்கண்டீஸ்ரா் கோயில் மற்றும் வந்தவாசி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பைரவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

எல்லா மாதங்களிலும் அஷ்டமி திதி இரண்டு முறை வரும். வளா்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய இரண்டு திதிகளில் தேய்பிறை அஷ்டமியில் பைரவா் வழிபாடு செய்வது விசேஷமானது.

இதில் காா்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி சக்தி வாய்ந்த அஷ்டமி திதிகளில் ஒன்றாகும். சிவனின் உக்கிரமான வடிவங்களில் ஒருவரான காலபைரவா் அவதரித்த நாள்தான் காா்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியாகும்.

இந்த நாள் இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களில் காலபைரவா் ஜெயந்தி வெள்ளிக்கிழமை (டிச.12) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, ஆரணியை அடுத்த மெய்கண்டீஸ்ரா் கோயிலில் காலபைரவா் ஜெயந்தி விழாவும், தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்றது.

இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்து. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

வந்தவாசி

வந்தவாசி சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் உள்ள கால பைரவா் சந்நிதியில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னா் கால பைரவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com