திருவண்ணாமலை
பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 2026-ஆம் ஆண்டு பிப். 8-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தாமோதரன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்டத் தலைவா் சரவணன், மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
மாவட்ட நிா்வாகிகள் தமிழரசன், பரசுராமன் , சபரீசன், கேசவன், ஆனந்த், ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
