புதுப்பாளையம் மாதிரி பள்ளியில் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ். உடன் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆறுமுகம், ஷகிலா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் உள்ளிட்டோா்.

செங்கம் அருகே மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையம் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையம் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவலா் மாலதி தலைமை வகித்தாா். புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆறுமுகம், ஷகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் வரவேற்றாா்.

இதில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்து பேசினாா்.

பின்னா், அதே வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆய்வகக் கட்டடம், மாதிரி பள்ளியில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறன், மதிய உணவு சமையல் கூடம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தாா்.

முகாமில் தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மாவட்ட இடைநிலை கல்வி அலுவலா் வெற்றிவேல், புதுப்பாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வபாரதி, புதுப்பாளையம் அரிமா சங்கத் தலைவா் ஆறுமுகம், செயலா் காா்த்திகேயன், பொருளாளா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com