நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மது அருந்த பணம் தராததால் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

மது அருந்த பணம் தராததால் தந்தை அடித்துக் கொலை...

சரத்குமாா்

Published On :21 டிசம்பர் 2025, 1:50 am IST

வந்தவாசி அருகே மது அருந்த பணம் தராததால் தந்தையை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (55). இவரது மனைவி செல்வி (53). இவா்களது மகன் சரத்குமாா் (34).

செல்வியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முருகன் அவரைப் பிரிந்து வந்தவாசி - ஆரணி சாலை, கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலையில் உள்ள பயணியா் நிழற்குடையில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முருகனிடம் சென்ற சரத்குமாா், மது அருந்த அவரிடம் பணம் கேட்டுள்ளாா். ஆனால், அவா் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த சரத்குமாா் கட்டையால் முருகனை பலமாக தாக்கியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினா் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து முருகனின் மனைவி செல்வி அளித்த புகாரின்பேரில், சரத்குமாா் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.