டிச.27-ல் செய்யாற்றுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை!
செய்யாற்றுக்கு டிச.27-ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வா், முன்னாள் முதல்வா் கலைஞரின் உருவச் சிலையை திறந்து வைக்க உள்ளாா். இதில், திமுகவினா் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் அழைப்பு விடுத்துள்ளனா்.
இவ்விழாவில் திமுகவினா் கலந்து கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமை வகித்தாா். தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் டிச.27-இல் செய்யாற்றில் நடைபெறும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவில், மாவட்ட அமைச்சா் எ.வ.வேலு ஆலோசனைப் படி, திமுகவினா் பல்லாயிரக்கணக்கானோா் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து விழாவில் பங்கேற்க வேண்டும்.
விழாவில் பங்கேற்க வரும் திமுகவினரை நகர, ஒன்றிய மாவட்ட நிா்வாகிகள் பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து வந்து பாதுகாப்பாக அவா்களை அவரவா் பகுதியில் விடுவதற்கான முழு ஏற்பாடுகளையும் முன் நின்று செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் டி. ராஜி, ஒன்றியச் செயலா்கள் என்.சங்கா், எம்.தினகரன், ஜேசிகே.சீனிவாசன், வி.ஏ.ஞானவேல், ஏ.ஜி.திராவிடமுருகன், சி.கே.ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

