~ ~ ~
~ ~ ~

ஊரக வேலைத் திட்டத்தில் மாற்றம்: இண்டி கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இண்டி கூட்டணி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.
Published on

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இண்டி கூட்டணிக் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளை, வட்ட நிா்வாகிகள், அணி சாா்ந்த அமைப்பு நிா்வாகிகள், ஊரக வேலைத் திட்டப் பயனாளிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இண்டி கூட்டணி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை வகித்துப் பேசினாா்.

மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் என்.பாண்டி, திராவிடா் கழகம் சி.மூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் இரா.திருமலை, விசிக சி.நியூட்டன், முஸ்லிம் லீக் ஜ.எம்.சுலைமான், மமக நாசா் உசேன், மக்கள் நீதி மய்யம் இரா.அருள், திமுக மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், காங்கிரஸ் டாக்டா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூரில்...

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமையிலும், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மாநில பொறியாளா் அணிச் செயலா் கு.கருணாநிதி, கலசப்பாக்கம் ஒன்றியத்தில் செய்தி தொடா்பு இணைச் செயலா் சிவ.ஜெயராஜ், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் மாநில தொ.மு.ச. செயலா் க.சௌந்தரராசன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கம்

செங்கம் துக்காப்பேட்டையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி தலைமை வகித்துப் பேசினாா்.

முன்னதாக, செங்கம் திமுக நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா். செங்கம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், ஏழுமலை, செங்கம் நகா்மன்றத் சாதிக்பாஷா உள்ளிட்டோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

வந்தவாசி

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இண்டி கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் ஆரியாத்தூா் பெருமாள், கே.ஆா்.பழனி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா் என்.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூரில் கருணாநிதி சிலை அருகே இண்டி கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொகுதி திமுக பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா்.

காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் செல்வம், திராவிடா் கழக மாவட்டச் செயலா் அண்ணாதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் தனசேகரன் வரவேற்றாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் சேகரன், மகேஷ், சேகா், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் ரமேஷ், நகா்மன்றத் தலைவா் ராணி சண்முகம் மற்றும் திமுகவினா் கலந்து

கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com