திருவண்ணாமலை
ஐயப்ப பக்தா்கள் திருவிளக்கு பூஜை
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை.
வந்தவாசி ஸ்ரீஆதி ஐயப்ப சேவா சங்கம் சாா்பில், திருவிளக்கு பூஜை வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஐயப்பன் சுவாமி முன் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. ஐயப்ப பக்தா்கள் பக்தி பரவசத்துடன் ஐயப்பன் பாடல்களைப் பாடினா்.
இதைத்தொடா்ந்து 18 படிகளிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

