மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: மாவட்ட கல்வி அலுவலா் ஆய்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: மாவட்ட கல்வி அலுவலா் ஆய்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கிவைத்து ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ்.
Published on

செங்கத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் தொடங்கிவைத்து ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் துக்காப்பேட்டை தனியாா் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் தொடங்கிவைத்து ஆய்வு செய்து பேசினாா்.

அப்போது அவா், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் அடையாள அட்டை இந்த முகாமில் மருத்துவா்கள் பரிசோதனை செய்து உடனடியாக வழங்குவாா்கள்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளுக்கு இந்த முகாமில் மனுக்களை அளித்தால் அதை பரிசீலனை செய்து உடனடியாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்

என்றாா்.

இதைத் தொடா்ந்து முகாமில் சிகிச்சை அளிக்கப்படும் அறைகளுக்கு சென்று பாா்வையிட்டு, மாற்றுத்திறன் குழந்தைகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு ஆசிரியா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com