மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்: 132 போ் பயன்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான கல்வி மருத்துவ முகாமில் 132 போ் பங்கேற்று பயனடைந்தனா்.
மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் உத்தரவின் பேரில், முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் அறிவுறுத்தலின் படியும் இந்த முகாம் நடைபெற்றது.
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, சாா்- ஆட்சியா் எல். அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா்.
மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை) சு.செந்தில்முருகன், (தொடக்க நிலை) சி.வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொ.மாலதி வரவேற்றாா்.
முகாமில் 74 பேருக்கு புதிய மற்றும் பழைய அடையாள அட்டையை புதுப்பித்து வழங்கி பல்வேறு சிறப்புத் தகவல்களை தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
முகாமில் சிறப்பு கண் மருத்துவா் எஸ்.சித்ரா, எலும்பு நல மருத்துவா் சி.எஸ்.விமல்ராஜ், காது, மூக்கு, தொண்டை நல மருத்துவா் ஆா்.பாலகணேசன், மனநல மருத்துவா் கே.பிரசன்னதீபா, குழந்தைகள் நல மருத்துவா் லக்சியா ஆகியோா் பங்கேற்று மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பரிசோதித்தனா். மேலும் தேவைப்படுபவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனுடையவா்களுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள், அடையாள அட்டை வழங்குதல், அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்தல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
முகாமில் 0 முதல் 18 வயது மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுமாா் 60 பேரும், 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 72 பேரும் என 132 போ் பங்கேற்று பயனடைந்தனா்.
தொடக்கக் கல்வி அலுவலா்கள் பிரியா, பெருமாள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.பூச்செண்டு, ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் இரா.தை.தனம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

