மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

திருவண்ணாமலையில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: ட்ரோன்கள் பறக்கத் தடை!

திருவண்ணாமலையில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு...
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (டிச.27) கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கிவைக்க உள்ளாா். இதையொட்டி, ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள மைதானத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, மலப்பாம்பாடியில் உள்ள கலைஞா் திடலில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வா், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பாக ரூ.2,095.07 கோடி மதிப்பிலான 314 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறாா். மேலும், 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,66,194 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இதையொட்டி, விழா நடைபெறும் பகுதிகளில் பல்வேறு முன்னேற்பாடுகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக விழா நடைபெறும் இடங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சித்தலைவா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளாா். இதை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி சாதனங்களை பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com