செய்யாறு வலுதூக்கும் வீராங்கனைக்கு அரசுப் பணி: ஒ.ஜோதி எம்எல்ஏ வாழ்த்து

செய்யாறு வலுதூக்கும் வீராங்கனைக்கு அரசுப் பணி: ஒ.ஜோதி எம்எல்ஏ வாழ்த்து

செய்யாறு வலுதூக்கும் வீராங்கனைக்கு அரசுப் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டதால், அந்த வீராங்கனைக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ வாழ்த்துத் தெரிவித்தாா்.
Published on

செய்யாறு வலுதூக்கும் வீராங்கனைக்கு அரசுப் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டதால், அந்த வீராங்கனைக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ வாழ்த்துத் தெரிவித்தாா்.

செய்யாறு செல்வ விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி மகள் கஸ்தூரி (21). இவா், வலுதூக்கும் போட்டியில் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைத்தாா். மேலும், தமிழகத்துக்கும், செய்யாறுக்கும் பெருமை சோ்த்துள்ளாா்.

இவருக்கு விளையாட்டுத் துறையில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பணி வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளரால் (நிா்வாகம்) பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தை மாவட்ட வருவாய் அலுவலா் மணிகண்டன் வழங்கினாா்.

இந்த பரிந்துரை கடிதத்தை செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதியிடம் காண்பித்து வலுதூக்கும் வீராங்கனை கஸ்தூரி வியாழக்கிழமை வாழ்த்துப் பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com